கஞ்சா விற்ற 6 பேர் கைது


கஞ்சா விற்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2021 12:43 AM IST (Updated: 10 May 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை
மதுரை கீரைத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வில்லாபுரம் பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த முத்து இருளாண்டி (வயது 57) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1½ கிலோ கஞ்சா, 3 கத்திகள், 45 மதுபாட்டில்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல் சுப்பிரமணியபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்காரா பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சபரி மணிகண்டன், யோகேஸ்வரன், பிரித்விராஜ், விக்னேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சேடபட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பேரையூர்-உசிலம்பட்டி சாலையில் அயோத்திபட்டி விலக்கு அருகில் கணவாய்பட்டியை சேர்ந்த ராணியம்மாள்(55) என்ற பெண் விற்பனை செய்வதற்காக 4 கிலோ கஞ்சா வைத்திருந்த போது ரோந்து சென்ற போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சேடபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராணியம்மாளை கைது செய்தனர்.

Next Story