2-வது நாளாக கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் நேற்று 2-வது நாளாக கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர்.
மதுரை
இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் நேற்று 2-வது நாளாக கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர்.
தொழிற்சாலைகள்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று(திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மளிகை கடைகள், காய்கறி கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை திறந்திருக்கும். மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும். மேலும் வாடகை கார், ஆட்டோ போக்குவரத்து முற்றிலும் தடை செயய்ப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தவிர மற்ற அனைத்து தொழிற்சாலைகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கிற்கு பொது மக்கள் தயார் ஆகும் வகையில் நேற்றும், நேற்று முன்தினமும் இருந்த ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதனால் நேற்றுமுன்தினம் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து இருந்தன. இதனால் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதுபோல் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான கடைகள் அடைத்து இருக்கும். ஆனால் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தன. செல்போன் கடை, சிறிய ஜவுளி கடை, ஸ்டேசனரி கடைகள், டெய்லர் கடைகள் உள்பட இதர கடைகள் அனைத்தும் நேற்று திறந்து இருந்தன.
போக்குவரத்து நெருக்கடி
பொதுமக்களும் இந்த கடைகளில் நேற்று 2-வது நாளாக திரண்டு இருந்ததால் அனைத்து இடங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் கீழமாசி வீதி பகுதியில் உள்ள கடைகள் அடைத்து இருக்கும். ஆனால் நேற்று இந்த பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. அதனால் அந்த பகுதி முழுவதும் நேற்று கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ேமலும் மீன், இறைச்சி கடைகளிலும் நேற்று கடும் கூட்டம் காணப்பட்டது.
இன்று முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் மதுவாங்க அதிகமானவர்கள் திரண்டனர். அவர்கள் காலை முதல் நீண்டவரியைில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். மேலும் மதுபிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை இருப்பு வைத்து கொள்ளும் வகையில் அதிக அளவில் வாங்கி சென்றதை காணமுடிந்தது.
அருகில் உள்ள கடைகளில்...
மதுரை மாவட்டத்தில் அரசு விதிகளின்படி முழு ஊரடங்கினை கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் போலீசாருடன் இணைந்து பல்வேறு முன்னேற்பாடுகளை எடுத்து உள்ளது. நகரின் முக்கிய சாலைகளின் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணி மேற்கொள்கின்றனர். அதாவது பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. அனுமதிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டுமே தங்கள் பணியிடத்திற்கு வாகனங்களில் செல்லலாம்.
தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கடைகளில் மளிகை பொருட்களை வாங்க வேண்டும் என்றும், சந்தை மற்றும் அடுத்த பகுதிகளுக்கு வரக்கூடாது என்று போலீசார் கேட்டு கொண்டு உள்ளனர். அதே போல் வீட்டை விட்டு கடைக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டு உள்ளனர்.
Related Tags :
Next Story