நெல்லை டவுனில் தொடர் மழையால் சேறும் சகதியுமான சாலைகள்- உடனே சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


நெல்லை டவுனில் தொடர் மழையால் சேறும் சகதியுமான சாலைகள்- உடனே சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2021 12:53 AM IST (Updated: 10 May 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுனில் தொடர் மழையால் சாலைகள் சேறும் சகதியுமாக மாறின. எனவே ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நெல்லை, மே:
நெல்லை டவுனில் தொடர் மழையால் சாலைகள் சேறும், சகதியுமாக மாறி உள்ளன. உடனே சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

மோசமான சாலைகள்

நெல்லை மாநகரில் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக நெல்லை மாநகரம் முழுவதும் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்களை  போட்டு  மூடினார்கள். ஆனால் அதன் பிறகு சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக கிடக்கிறது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சேறும், சகதியுமானது

நெல்லை டவுன் தொண்டர் சன்னதியில் இருந்து வழுக்கோடை வரை செல்லும் சாலைகள் ஓராண்டுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குழிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மட்டுமல்லாமல் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதவிர நெல்லை மாநகரில் பெரும்பாலான சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. அவையும் மழையால் சேறும் சகதியுமாக மாறி உள்ளன. அவற்றையும் சீரமைக்க பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story