முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளின் ஷட்டர்களில் வெல்டிங் வைத்து பூட்டு


முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளின் ஷட்டர்களில் வெல்டிங் வைத்து பூட்டு
x
தினத்தந்தி 10 May 2021 12:59 AM IST (Updated: 10 May 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கை முன்னிட்டு நெல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளின் ஷட்டர்களில் வெல்டிங் வைத்து பூட்டப்பட்டது.

நெல்லை, மே:
முழு ஊரடங்கு காரணமாக, நெல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளின் ஷட்டர்களில் வெல்டிங் வைத்து பூட்டப்பட்டது.

டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த இன்று (திங்கட்கிழமை) முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி காய்கறி, மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரம் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மற்ற அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகளும் நேற்று மாலையில் மூடப்பட்டன.

வெல்டிங் வைத்து பூட்டு

டாஸ்மாக் கடைகள் கடந்த 2 நாட்களாக மாலை 6 மணி வரை திறக்கப்பட்டு முழு வீச்சில் வியாபாரம் நடைபெற்றது. தொடர்ந்து முழு ஊரடங்கால் 2 வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
எனவே டாஸ்மாக் கடைகளில் திருட்டு, முறைகேடான விற்பனை போன்றவை நிகழாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக டாஸ்மாக் கடைகளின் ஷட்டர்களை திறக்க இயலாதவாறு, அவற்றின் மீது வெல்டிங் வைத்து பூட்டினர்.

Next Story