மது விற்ற 40 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் மது விற்றதாக 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம், மே:
கூடங்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விஜயாபதி அருகில் மது விற்றதாக, திருவம்பலாபுரத்தைச் சேர்ந்த மாசானமுத்துவை (வயது 42) போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று கூடங்குளம் காட்டு பகுதியில் மது விற்றதாக தங்க குமரகுரு என்பவரையும் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 38 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 654 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story