தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கூடங்குளத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடங்குளம், மே:
கூடங்குளம் கிழக்கு சுடலைமாட சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள். இவருடைய மகன் தங்க செல்வம் (வயது 27). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்தது. இதனால் மனமுடைந்த தங்க செல்வம் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கூடங்குளம் போலீசார் விரைந்து சென்று, இறந்த தங்கசெல்வத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story