குடிபோதையில் லாரியை ஓட்டி வந்தவர் கைது
குடிபோதையில் லாரியை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார்
திருமங்கலம்
திருமங்கலம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் பாண்டி(வயது 52). சொந்தமாக லாரி வைத்து உள்ளார். வாடகைக்கு செல்லும் லாரியை இவரே ஓட்டிச் செல்வது வழக்கம். நேற்று இரவு அரசு அரிசி குடோனிற்கு ஏற்றி வந்த அரிசி மூடையை இறக்கி விட்டு, லாரியை உசிலம்பட்டி ரோடு வழியாக ஓட்டினார். அரிசி இறக்கிக் கொண்டிருந்த இவர் மது அருந்தியுள்ளார். அரிசி இறக்கி முடித்தவுடன் லாரியை ஓட்டினார். மது அருந்தி லாரியை ஓட்டும்போது நிதானம் இழந்ததால் ரோடு முழுவதும் தாறுமாறாக ஓடியது. ரோட்டில் வந்த மினி வேன் மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதி ரோட்டின் கீழே தள்ளி விட்டு சென்றது. தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் விரைந்து வந்து லாரியை மடக்கி பிடித்து டிரைவர் பாண்டியை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story