பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் தங்கச்சங்கிலி பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டது
வாடிப்பட்டி
மதுரை அருகே சமயநல்லூர் மெயின்ரோட்டில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருபவர் கணேசன். இவரது மனைவி மாணிக்கவள்ளி(வயது 40). இவர் நேற்று முன்தினம் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அதில் ஒருவர் மாணிக்கவள்ளியிடம் பொருட்கள் சிலவற்றை கூறி அதை தருமாறு கேட்டார். அவர் அதை எடுத்துகொடுக்கும் போது மாணிக்கவள்ளி கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்தார். ஆனால் மாணிக்கவள்ளி உஷாராகி கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதைதொடர்ந்து அந்த வாலிபர்கள் தங்கள் கையில் சிக்கிய 1½ பவுன் தங்கச்சங்கிலியை மட்டும் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினர். அதனால் மாணிக்கவள்ளியின் கையில் 4½ பவுன் தப்பியது. இது சம்பந்தமாக அவர் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story