ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு தற்கொலை


ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 May 2021 1:15 AM IST (Updated: 10 May 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் அமைதி சோலைநகரில் வசித்து வந்தவர் மாரிச்சாமி (வயது 72) இவர் போலீஸ் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாத நிலையில் அவதிப்பட்டு வந்தார். மேலும் அவர் கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற பயத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கண்மாய்க்குள் உள்ள உயர்மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த திருநகர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story