பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த வேன் டிரைவர்
நெல்லை சுத்தமல்லியில் பூட்டிய வீட்டுக்குள் வேன் டிரைவர் பிணமாக கிடந்தார்.
பேட்டை, மே:
நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி கல்லூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரன் மகன் பிரம்மநாயகம் (வயது 32). வேன் டிரைவரான இவர் தனியாக வசித்து வந்தார். நேற்று நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி சுத்தமல்லி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story