சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கரன்கோவில், மே:
சங்கரன்கோவில் வட்டார விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் 50 சதவீத கூலி உயர்வு, விடுப்பு ஊதியம் ரூ.450 வழங்கக்கோரி கடந்த மாதம் 12-ந்தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி தொழிற்சங்கத்தினர் சங்கரன்கோவில் திருவள்ளுவர் சாலை, அண்ணாநகர், வாரியார் வாசகசாலை, லட்சுமியாபுரம் 3-வது தெரு, 5-வது தெரு, தாமஸ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சமூக இடைவெளியுடன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க தலைவர் ரத்தினவேல், செயலாளர் லட்சுமி, பொருளாளர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story