மாவட்டத்தில் புதிதாக 691 பேருக்கு கொரோனா தொற்று; ஈரோட்டில் முதியவர் பலி


மாவட்டத்தில் புதிதாக  691 பேருக்கு கொரோனா தொற்று; ஈரோட்டில் முதியவர் பலி
x
தினத்தந்தி 10 May 2021 1:59 AM IST (Updated: 10 May 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் நேற்று புதிதாக 691 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் ஈரோட்டில் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

ஈரோடு
மாவட்டத்தில் நேற்று புதிதாக 691 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் ஈரோட்டில் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
691 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் தினந்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் தினந்தோறும் 600-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் புதிய உச்சமாக 779 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று புதிதாக மேலும் 691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 701 ஆக உயர்ந்தது.
கொரோனாவுக்கு முதியவர் பலி
இதற்கிடையில் ஈரோட்டை சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் கடந்த மாதம் 27-ந்தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் கடந்த 7-ந் தேதி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார்.
22,562 பேர் குணமடைந்தனர்
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 557 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 22 ஆயிரத்து 562 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 3 ஆயிரத்து 966 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story