தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி


தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
x
தினத்தந்தி 10 May 2021 2:06 AM IST (Updated: 10 May 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள்.

தென்காசி, மே:
தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 வயது, 48 வயது, 60 வயது, 49 வயது ஆண்கள், 67 வயது மூதாட்டி ஆகியோர் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தனர். இவர்களுடன் சேர்ந்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மாவட்டத்தில் புதிதாக 385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 847 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 275 பேர் குணமடைந்தனர். தற்போது 1,366 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story