தாளவாடி மலைப்பகுதியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம்; பொதுமக்கள் கோரிக்கை

தாளவாடி மலைப்பகுதியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம்; பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 May 2021 8:48 PM GMT (Updated: 9 May 2021 8:48 PM GMT)

தாளவாடி மலைப்பகுதியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தாளவாடி
தாளவாடி மலைப்பகுதியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
80-க்கும் மேற்பட்ட...
தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தற்போது தாளவாடி மலைப்பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் மட்டும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
மையம்
தாளவாடி பகுதியில் ஒருவர் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டால் தாளவாடியில் இருந்து ஈரோட்டுக்குத்தான் செல்ல வேண்டும். அவ்வாறு தாளவாடியில் இருந்து ஈரோட்டுக்கு செல்ல 120 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். இதனால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
எனவே இதை கருத்தில் கொண்டு தாளவாடி பகுதியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story