பிரதோஷ வழிபாடு


பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 10 May 2021 2:20 AM IST (Updated: 10 May 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீசுவரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர், உற்சவர் மற்றும் நந்திபெருமானுக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் இன்றி பூஜை, வழிபாடு நடந்தது. பிரதோஷ வழிபாட்டை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் நடத்தினார்.
இதேபோல் மங்களமேட்டை அடுத்துள்ள சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்தவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு மாலையில் கோவில் திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்மன், நந்தி பெருமானுக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் கார்த்திக் மற்றும் செயல் அலுவலர் அகிலா ஆகியோர் செய்திருந்தனர். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகளால் வழிபாட்டில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Next Story