இன்று முதல் இ-சேவை மையங்கள் மூடல்


இன்று முதல் இ-சேவை மையங்கள் மூடல்
x
தினத்தந்தி 10 May 2021 2:20 AM IST (Updated: 10 May 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் இன்று முதல் இ-சேவை மையங்கள் மூடப்படுகிறது.

அரியலூர்:
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக அரியலூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கீழ் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையம் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. இதேபோல் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய தாசில்தார் அலுவலங்களில் செயல்படும் இ-சேவை மையங்களும் தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story