சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது


சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 10 May 2021 2:20 AM IST (Updated: 10 May 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த உடையார்பாளையம் அருகே வடக்கு பரணம் கிராமத்தில் உள்ள காலனி தெருவைச் சேர்ந்தவர் விஜய்(வயது 26). கூலித் தொழிலாளியான இவருக்கும், 16 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய், அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த சிறுமிக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்ததாகவும், சிறுமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிறுமியின் பெற்றோருக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தனது மகளை தொடர்ந்து தொந்தரவு செய்வதாக கூறி விஜய் மீது, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் செய்தார். அதன்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Next Story