விபத்தில் இறந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு உதவித்தொகை


விபத்தில் இறந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு உதவித்தொகை
x
தினத்தந்தி 10 May 2021 2:21 AM IST (Updated: 10 May 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் இறந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

அரியலூர்:
அரியலூர் மாவட்ட காவல்துறையில் 1993-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாரில், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராதாகிருஷ்ணன், பணியில் இருந்தபோது விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவருடன் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சக போலீசார், இணைந்து காக்கும் கரங்கள் அமைப்பின் மூலம், மறைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு வழங்க ரூ.5 லட்சத்து 11 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து அந்த உதவித்தொகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலையில் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story