ஆயிரம் பேருக்கு முககவசம்


ஆயிரம் பேருக்கு முககவசம்
x
தினத்தந்தி 10 May 2021 2:22 AM IST (Updated: 10 May 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சிலுவை தினத்தையொட்டி ஆயிரம் பேருக்கு முககவசம் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்:
பெரம்பலூரில், மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் உலக செஞ்சிலுவை தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கவுரவ பொருளாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின்படி, ஆயிரம் பேருக்கு இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், பயணிகள், ஆட்டோ டிரைவர்கள், போக்குவரத்து போலீசார், நகராட்சி தூய்மை பணியாளர்கள், பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. மேலும் முதியோர் இல்லத்தில் இருந்த 25 பேருக்கு பிஸ்கட் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது. சங்கத்தின் இணைச் செயலாளர் ஜோதிவேல், முன்னாள் குழு உறுப்பினர் மாயக்கிருஷ்ணன் மற்றும் சங்க உறுப்பினர்கள், அமரர் ஊர்தி டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story