மேலும் 419 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆதலால் பாதிப்பு எண்ணிக்கை 22,522 உயர்ந்துள்ளது. 20,560 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,649 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 2 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி, ராஜாஜி நகர், கமலம் பச்சையப்பன்தெரு, டி.எம்.பி. கிட்டங்கிதெரு, எப்.எப். ரோடு, லட்சுமி நகர், கே.கே.எஸ்.எஸ்.என். நகர், கருப்பசாமி நகர், பாண்டியன் நகர், லட்சுமி நகர், முத்துராமலிங்க நகர், காந்தி நகர், ஆர்.எஸ்.நகர். காலனி, ஆர்.எஸ். நகர், பெரிய பள்ளிவாசல் தெரு, ஆர்.ஆர். நகர், ராஜாஜி நகர், கன்னிசேரிபுதூர், தம்மநாயக்கன்பட்டி, பட்டம்புதூர், எரிச்சநத்தம், அல்லம்பட்டி, சூலக்கரை, அனுமன் நகர், பாத்திமா நகர், லட்சுமி காலனி, என்.ஜி.ஓ.காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, குன்னூர், தம்பிபட்டி, மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், மேலாண்மறை நாடு, நள்ளி போத்தி, ரெட்டியபட்டி, சாத்தூர், மத்தியசேனை, மீனம்பட்டி, சிவந்தி நகர், தேளி, பாலவனத்தம், அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, நரிக்குடி, திருச்சுழி, கோவிலாங்குளம், பந்தல்குடி, ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல், கீழாண்மறைநாடு, ஆனைக்குட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story