கோவையில் 4 நாட்களில் 10 ஆம்னி பஸ்கள் பறிமுதல்


கோவையில் 4 நாட்களில் 10 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 May 2021 2:38 AM IST (Updated: 10 May 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 4 நாட்களில் 10 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை

கோவையில் இருந்து பீகார், கொல்கத்தா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அதிக அளவிலான நபர்களை ஏற்றி செல்லும் ஆம்னி பஸ்கள் குறித்து போக்குவரத்துறை ஆணையாளர் ஜவகர், துணை ஆணையாளர் உமா சக்தி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், 

கோவை மத்திய மண்டல வட்டார போக்குவரத்து அதிகாரி பாஸ்கரன் தலைமையில் கடந்த 4 நாட்களாக கோவையின் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை நடந்தது.

 இதில், பெர்மிட் இல்லாமல் இருந்தது, அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதல் நபர்களை பஸ்சில் ஏற்றியது, வரி செலுத்தாதது உள்ளிட்ட காரணங்களுக்காக 10 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில், நேற்று ஒரே நாளில் 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 இந்த பஸ்களுக்கு ரூ.6 லட்சம் வரை அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி வரை ஆம்னி பஸ்கள் குறித்து கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என மத்திய மண்டல வட்டார போக்குவரத்து அதிகாரி பாஸ்கரன் தெரிவித்தார்.

Next Story