திருச்சிக்கு 10 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்


திருச்சிக்கு 10 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்
x
தினத்தந்தி 9 May 2021 9:11 PM GMT (Updated: 9 May 2021 9:11 PM GMT)

திருச்சிக்கு 10 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது

திருச்சி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வராமல் தடுப்பதற்காக கோவேக்சின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளின் தட்டுப்பாடு காரணமாக அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. திருச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசு 10 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது. ஆதலால், இனி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தாராளமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், மாவட்டங்களுக்கு தலா 3 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், கரூர் மாவட்டத்திற்கு 5 ஆயிரம் தடுப்பூசிகளும், அறந்தாங்கி பகுதிக்கு 2 ஆயிரம் தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.


Next Story