ஆலோசனை கூட்டம்
கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
கொரோனா பரவலை தடுக்க அரசு இன்று முதல் ஊரடங்கு அறிவித்துள்ளது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் வியாபாரிகள், அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலால் ஆணையரும், கொரோனா தடுப்பு அதிகாரியுமான முருகன் தலைமை தாங்கினார்.
இதில் தாசில்தார் சரவணன், துைண போலீஸ்சூப்பிரண்டு நமச்சிவாயம், நகராட்சி கமிஷனர் மல்லிகா, வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பால்துரை, ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கோமதி சங்கர் குரு சாமி, அனைத்து வியாபாரிகள் சங்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கொேரானா பரவலை தடுக்கும் நோக்கத்தோடு ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணிங்டன் மார்க்கெட்டில் செயல்படும் காய்கறி கடைகள் 11-ந் தேதி முதல் மங்காபுரம் பள்ளி மைதானத்தில் இயங்கும்.
அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் உழவர் சந்தை அருகே உள்ள மீன் மார்க்கெட் அவர்களுடைய குடோனில் வைத்து சமூக இடைவெளிவிட்டு நடத்திக் கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மங்காபுரம் பள்ளி மைதானத்தில் மீன் வியாபாரத்தை நடத்திக் கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story