சாலையில் பாலை கொட்டி போராட்டம்
முழுமையாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி பாலை சாலையில் ெகாட்டி போராட்டம் நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியத்தில் 3 பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 5 தனியார் பால் பண்ணைகள் உள்ளன.
இந்த பால் உற்பத்திக்கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் பால் பண்ணைகளில் ஆவின் நிர்வாகம் முழுமையாக பாலை கொள்முதல் செய்யாமல் குறைவான அளவே நீண்ட காலமாக கொள்முதல் செய்து வந்ததாக தெரிகிறது.
எனவே ஆவின் நிர்வாகம் முழுமையாக பால் கொள்முதலை செய்ய வேண்டும் என கறவை மாடு வளர்ப்பவர்கள் மற்றும் கூட்டுறவு சங்கத்தினர் பலமுறை ஆவின் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ஆவின் நிர்வாகம் குறைந்த அளவே பாலை கொள்முதல் செய்துள்ளது. இதனை கண்டித்து சுந்தரபாண்டியத்தில் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க தலைவர் மாரிமுத்து தலைமையிலான பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கறவை மாடு வளர்ப்பவர்கள் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல்அறிந்த கிருஷ்ணன் கோவில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர் மற்றும் கறவை மாடு வளர்ப்போரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனை அடுத்து ஆவின் நிர்வாகம் முழுமையாக பாலை கொள்முதல் செய்தனர்.
முழுமையாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி பாலை சாலையில் ெகாட்டி போராட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story