கன்னங்குறிச்சியில் கிணற்றில் நீச்சல் பழகிய வாலிபர் தண்ணீரில் மூழ்கி சாவு
கிணற்றில் நீச்சல் பழகிய வாலிபர் தண்ணீரில் மூழ்கி சாவு
கன்னங்குறிச்சி:
சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் தங்கவேல் (வயது 22). ஆட்டோ மொபைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். நாளை (செவ்வாய்க்கிழமை) இவரது பிறந்த நாள் ஆகும். அன்று ஊரடங்கு இருப்பதினால் முன்கூட்டியே கன்னங்குறிச்சியில் உள்ள தனது மாமா வீட்டிற்கு சென்று கேக் கொடுத்தார். பின்னர் அங்குள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகியபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் அங்கு சென்று உடலை மீட்டனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story