செம்மஞ்சேரியில் மாடியில் இருந்து தவறி விழுந்த டென்னிஸ் பயிற்சியாளர் சாவு


செம்மஞ்சேரியில் மாடியில் இருந்து தவறி விழுந்த டென்னிஸ் பயிற்சியாளர் சாவு
x
தினத்தந்தி 10 May 2021 6:00 PM IST (Updated: 10 May 2021 6:00 PM IST)
t-max-icont-min-icon

செம்மஞ்சேரியில் மாடியில் இருந்து தவறி விழுந்த டென்னிஸ் பயிற்சியாளர் பரிதாபமாக இறந்தார்.

 சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சாவு

செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 28), டென்னிஸ் பயிற்சியாளர். நேற்று அவர் வசித்து வந்த வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக செம்மஞ்சேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல் அடிபட்ட ராஜா பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முற்றுகை

ஆஸ்பத்திரியில் டாக்டர் இருந்திருந்தால் ராஜாவை காப்பாற்றியிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்ட ராஜாவின் உறவினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் செம்மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story