சாயர்புரம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
சாயர்புரம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள புளிய நகர் வாழைத் தோட்ட பகுதியில் காசு வைத்து சிலர் சூதாடிய வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாம்அருள்ராஜ் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு சூதாடிக் கொண்டிருந்த புளியநகர் ராமையா மகன் பட்டுராஜ் (வயது 37), சிவத்தையாபுரம் பால்ராஜ் மகன் அன்புராஜ்(31), சந்திரன் மகன் கிருஷ்ணராஜ் (27), பண்ணைவிளை பங்களா சாமுவேல் மகன் பீட்டர் ஸ்டாலின்( 27), நடுவக்குறிச்சி ஜெபஸ் மகன் செல்வராஜ்(35), ஞானராஜ் மகன் அலெக்ஸ் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story