உடன்குடி பகுதியில் 15 பேருக்கு கொரோனா


உடன்குடி பகுதியில் 15 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 May 2021 8:01 PM IST (Updated: 10 May 2021 8:01 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி பகுதியில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

குலசேகரன்பட்டினம்:
உடன்குடி பகுதியில் நேற்று ஒரேநாளில் 9 வயது குழந்தை உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று
உடன்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் 15 பேர் பாதிப்பு
 இந்தநிலையில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் குலசேகரன்பட்டினம் அருகிலுள்ள கல்லாமொழி அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 22 வயதுஆண், 21 வயது ஆண், 26 வயது ஆண், 22 வயது ஆண், 27 வயது ஆண், 22 வயது ஆண், உடன்குடியைச் சேர்ந்த 47 வயது பெண், உடன்குடி புதுமனையை சேர்ந்த 38 வயது ஆண், வெள்ளாளன்விளையை சேர்ந்த 9 வயது ஆண்குழந்தை, மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த 60 வயது பெண், உடன்குடி புதுமனை சேர்ந்த 48 வயது பெண், உடன்குடி புது தெருவை சேர்ந்த 23 வயது ஆண், உடன்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 வயது பெண், 17 வயது ஆண், 19 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 
கிருமிநாசினி தெளிப்பு
இதை தொடர்ந்து உடன்குடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனிபிரிமின், குலசேகரன்பட்டினம் டாக்டர் ஆர்த்தி பிரசாத் தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் குலசேகரன்பட்டினம் ஊராட்சித் தலைவர் சொர்ண பிரியா,  சுகாதார ஆய்வாளர் குருசாமி, சுகாதார செவிலியர் இளவரசி சரஸ்வதி, ஊராட்சி செயலாளர் அப்துல் ரசாக் ரசூழ்தீன் மற்றும் மருத்துவ குழுவினர் தொற்று பகுதிகளிலும் மற்றும் குலசேகரன்பட்டினம் காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தனர்.

Next Story