தூத்துக்குடியில் நாளை இலவச கொரோனா தடூப்பூசி முகாம்


தூத்துக்குடியில் நாளை இலவச கொரோனா தடூப்பூசி முகாம்
x
தினத்தந்தி 10 May 2021 8:19 PM IST (Updated: 10 May 2021 8:19 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நாளை இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் (துடிசியா), தூத்துக்குடி மாவட்ட தொழில் மையமும் இணைந்து நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு முத்தம்மாள்காலனி ராம்நகர் துடிசியா அரங்கத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை நடத்துகிறது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தொடங்கிவைக்கிறார்.
முகாமில் 45 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது. நோய் மேலும் பரவாமல் இருக்கவும் நோயின் தாக்கத்தை குறைக்கவும் தடுப்பூசி நமக்கு வரப்பிரசாதமாக அமைகிறது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அவசியம் தங்களின் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும்,  என துடிசியா தலைவர் நேருபிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

Next Story