51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 10 May 2021 8:49 PM IST (Updated: 10 May 2021 8:49 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம், முத்தூர் பகுதியில் தாய்மகள் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கேயம்
 காங்கேயம், முத்தூர் பகுதியில் தாய்மகள் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கொரோனா பாதிப்பு
காங்கேயம் பகுதியில் தற்போது கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று வந்த கொரோனா பரிசோதனை முடிவில் காங்கேயம் நகரம் எம்.பி.எம்.நகரை சேர்ந்த 56 வயது ஆண், முல்லை நகரை சேர்ந்த 30 வயது ஆண், காமராஜ் வீதியை சேர்ந்த 50 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 
மேலும்  பழையகோட்டை சாலை பகுதியை சேர்ந்த 36 வயது பெண், 40 வயது ஆண், 13 வயது சிறுமி, எல்.ஜி.ஜி.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த 49 வயது ஆண், திருவள்ளுவர் வீதியை சேர்ந்த 67 வயது ஆண், அழகேகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த 58 வயது ஆண், ஆகிய 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிலர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், சிலர் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் காங்கேயம் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
முத்தூர்
இதுபோல் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் பரிசோதனை முடிவு நேற்று காலை வெளியிடப்பட்டது. இதில்  சின்னமுத்தூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 44 வயது தாய், அவரது 20 வயதுடைய மகள், பாப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 42 வயது பெண் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. 
இதனை தொடர்ந்து வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜலட்சுமி, முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள். பிரசாத்தாமரைக்கண்ணன், மார்கினி, வினோதினி, நவீனா ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பு கண்டறியப்பட்ட ஒரு சிலர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 
--------

Next Story