ஆத்தூர் பகுதியில் மது விற்ற 6 பேர் கைது
ஆத்தூர் பகுதியில் மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அனுமதியின்றி மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் அதிரடி சோதனை
ஆத்தூர் பகுதியில் அனுமதியின்றி சிலர் மது விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் தலைமையில் போலீசார் தெற்கு ஆத்தூரில் சோதனையில் ஈடுபட்டனர். கொழுவைநல்லூர் சாலையில் அனுமதியின்றி மது விற்றதாக நரசன்விலை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கணேசன் மகன் மாதவன்( வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 18 மது பாட்டில்களும், ரூ.150-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
புன்னக்காயல் ரோடு பகுதியில்...
இதேபோல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் தலைமையில் போலீசார் ஆத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புன்னக்காயல் ரோடு அம்மன் கோவில் அருகில் அனுமதியின்றி மது விற்றதாக கீழக்கீரனுரை சேர்ந்த முருகேசன் மகன் முனியராஜ்(36) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் போலீசார் வடக்கு ஆத்தூர் புன்னக்காயல் ரோடு தனியார் வங்கி அருகில் அனுமதியின்றி மதுபானம் விற்ற புன்னக்காயல் தெற்கு தெருவை சேர்ந்த மர்ஸிலின் மகன் சிபல் (40) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 14 மதுபாட்டில்களை பறிதமுல் செய்தனர். தொடர்ந்து வடக்கு ஆத்தூர் கூலக்கடை பஜார் கீழ் புறம்அனுமதியின்றி மதுபானம் விற்றதாக புல்லாவெளி வடக்குத் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் கேசவமூர்த்தி(40 ) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முக்காணியில் 2 பேர் கைது
இதே போல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியப்பன் தலைமையில் போலீசார் முக்காணி அருந்ததியர் தெரு அருகில் அனுமதியின்றி மது பானம் விற்றதாக முக்காணி பரதர்தெருவை சேர்ந்த அந்தோணி மகன் ராபர்ட் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அதே பகுதி முக்காணி ரவுண்டானா அருகில் அனுமதியின்றி மது விற்றதாக தெற்கு வாழவல்லானை சேர்ந்த நடராஜன் (19) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story