பழனி மார்க்கெட்டில் ஆர்.டி.ஓ. ஆய்வு
பழனி மார்க்கெட் பகுதியில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆர்டிஓ திடீர் ஆய்வு செய்தார்.
பழனி:
பழனியில் முழுஊரடங்கையொட்டி பஸ்நிலையம், திண்டுக்கல் சாலை, உடுமலை சாலை, தாராபுரம் சாலை என முக்கிய சாலைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
காலையில் உழவர்சந்தை, காந்தி மார்க்கெட் ஆகிய இடங்களில் மக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றும்படி போலீசார் அறிவுறுத்தினர்.
இந்தநிலையில் பழனி ஆர்.டி.ஓ. ஆனந்தி நேற்று பழனி பஸ்நிலையம், காந்தி மார்க்கெட் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கொரோனா விதிமுறைகளை கடைக்காரர்கள், பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா? என்று பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது தாசில்தார் வடிவேல் முருகன், வட்டார சுகாதார அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story