ரேஷன் கடைகளில் திரண்ட பொதுமக்கள்


ரேஷன் கடைகளில் திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 10 May 2021 9:12 PM IST (Updated: 10 May 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் வாங்குவதற்கு காலை 7 மணிக்கே பொதுமக்கள் ரேஷன் கடைகளில் திரண்டிருந்தனர்.

உடுமலை
உடுமலையில் கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் வாங்குவதற்கு காலை 7 மணிக்கே பொதுமக்கள் ரேஷன் கடைகளில் திரண்டிருந்தனர்.
 நிவாரண தொகை
கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட சிரமங்களைக்குறைத்து, மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் கொரோனா நிவாரணத்தொகையாக ரூ.4ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் முதல் தவணையாக ரூ.2ஆயிரம், வருகிற 15 ந் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கூட்டத்தை குறைக்க வீடு தேடிச்சென்று டோக்கனும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அந்த டோக்கனில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை ரூ.2,000 என்றும், அந்த குடும்ப அட்டைதாரருக்கு எந்த தேதியில் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும், டோக்கன் எண் மற்றும் நிவாரணத்தொகை வாங்க எத்தனை மணிக்கு வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு அந்த டோக்கன்களில் தேதியும், நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.200 பேருக்கு இந்த நிவாரணத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வீடு, வீடாக சென்று டோக்கன்
உடுமலை தாலுகாவில் மொத்தம் 127 முழுநேர ரேஷன் கடைகளும் 56 பகுதி நேரரேஷன்கடைகளும் எனமொத்தம் 183 ரேஷன் கடைகள் உள்ளன. அரிசி வாங்கும் ரேஷன் அட்டைகள் மொத்தம் 1 லட்சத்து 1 ஆயிரத்து 579 உள்ளன. இவர்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்படும்.
இதற்காக டோக்கன் வழங்கப்படும் என்ற தகவல் தெரிந்ததும் நேற்று காலை 7 மணிக்கே ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வந்து காத்திருந்தனர். நேரம் ஆக, ஆக பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் ரேஷன்கடை ஊழியர்கள் காலை 8 மணிக்கு அந்தந்த ரேஷன் கடைகளுக்கு சென்றனர். அப்போதுஅங்கு திரண்டிருந்தவர்களிடம் டோக்கன் அவரவர் வீடுகளுக்கு கொண்டுவந்துதரப்படும் என்று கூறி திருப்பி அனுப்பினர்.
அதன்பிறகு டோக்கனில், குடும்ப அட்டைகளின் எண் உள்ளிட்ட விபரங்கள் எழுதப்பட்டன. அவற்றை ரேஷன்கடை ஊழியர்கள் வீடுவீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களிடம் வழங்கினர். 

Next Story