நாகை பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


நாகை பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 10 May 2021 3:49 PM GMT (Updated: 10 May 2021 3:49 PM GMT)

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாகை பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் மீன் விற்பனை நடைபெறாது என அறிவித்தனர்.

நாகப்பட்டினம்:
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு நேற்று முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவை  கட்டுப்படுத்தும் விதமாக நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், திடீர் குப்பம், கல்லாறு, நம்பியார் நகர் உள்ளிட்ட மீனவர் கிராமத்தை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.  இதனால் தங்களது  படகுகளை கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.   மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் தொழிலுக்கு செல்லாத நிலையில், தற்போது பைபர் படகு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் மீன்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.   முழு ஊரடங்கு முடியும் வரை மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என பைபர் படகு மீனவர்கள் தெரிவித்தனர். 
மேலும் அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறை முகத்திலும் மீன் விற்பனை நடைபெறாது என மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்களின் இந்த அறிவிப்பால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story