சிறுமிக்கு பாலியல் தொல்லை


சிறுமிக்கு பாலியல் தொல்லை
x
சிறுமிக்கு பாலியல் தொல்லை
தினத்தந்தி 10 May 2021 9:32 PM IST (Updated: 10 May 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோவை

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர் சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து மறைவான பகுதிக்கு கூட்டி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். 

இதனால் அந்த சிறுமி அலறி துடித்தாள். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றனர். அதற்கு அந்த ஆசாமி தப்பி ஓடிவிட்டார். 

இதில் அந்த சிறுமியின் கழுத்து உள்பட உடலில் பல்வேறு இடங்களில் நகக்கீறல்கள் ஏற்பட்டு இருந்தது. இதனால் அந்த சிறுமி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். 


இதுகுறித்த புகாரின் பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கட்டிட தொழிலாளி என்பதும், அவர் தாடியுடன் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story