ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.52 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.52 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நேற்று எள் மூட்டைகள்-600, மணிலா மூட்டை-10, உளுந்து மூட்டை-7, மக்காச்சோளம்-15 மற்றும் பச்சைப்பயறு, வரகு, கேழ்வரகு உள்பட 631 தானிய மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
இதில் 80 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை எள் அதிகபட்சமாக ரூ.8,492- க்கும், குறைந்தபட்சமாக ரூ.5,519-க்கும், 100 கிலோ எடை கொண்ட உளுந்து ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.4,999-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,999-க்கும், 100 கிலோ எடை கொண்ட மக்காச்சோளம் ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.1,613-க்கும், குறைந்த பட்சமாக ரூ.1,509-க்கும் விலை போனது. நேற்று ஒரே நாளில் ரூ.52 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ராசிபுரம் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் இந்த தானிய மூட்டைகளை வாங்கிச்சென்றனர்.
Related Tags :
Next Story