விக்கிரவாண்டி அருகே கொரோனாவுக்கு என்ஜினீயர் பலி
கொரோனாவுக்கு என்ஜினீயர் பலி
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் பகுதியை சேர்ந்தவர் 38 வயதுடைய நபர். இவர் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருடைய உமிழ்நீரை பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து அவருடைய உடல் கொரோனா விதிமுறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story