விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2 நாட்களில் ரூ.28 கோடிக்கு மது விற்பனை


விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்  2 நாட்களில் ரூ.28 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 10 May 2021 10:15 PM IST (Updated: 10 May 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

மது விற்பனை

விழுப்புரம், 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் 2 வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கின. 15 நாட்கள் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்பதால் அந்நாட்களுக்கு தேவையான மதுபான வகைகளை வாங்க மதுபிரியர்கள் ஏராளமானோர் டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்துச்சென்று மொத்தம், மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.
அந்த வகையில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 228 டாஸ்மாக் கடைகளிலும் கடந்த 2 நாட்களாக மதுபிரியர்களின் கூட்டம் திருவிழா கூட்டம்போல் அலைமோதியது. இதனால் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. கடந்த 8-ந் தேதியன்று ரூ.15 கோடியே 35 லட்சத்து 53 ஆயிரத்து 380-க்கு மதுபானம் விற்பனையான நிலையில் 2-வது நாளான நேற்று முன்தினமும் மதுபாட்டில்கள் விற்பனை அதிகமாக நடந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் பிராந்தி, விஸ்கி வகைகள் 14,689 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 9,350 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்தன. இதன் மூலம் ரூ.12 கோடியே 73 லட்சத்து 65 ஆயிரத்து 460-க்கு மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளது. ஆக மொத்தம் முழு ஊரடங்கு எதிரொலியாக கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.28 கோடியே 9 லட்சத்து 18 ஆயிரத்து 840-க்கு மது விற்பனை நடந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story