திண்டிவனத்தில் அரசு பஸ் மோதி காவலாளி பலி


திண்டிவனத்தில் அரசு பஸ் மோதி காவலாளி பலி
x
தினத்தந்தி 10 May 2021 10:17 PM IST (Updated: 10 May 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

காவலாளி பலி

திண்டிவனம், 
திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் அய்யந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 45). தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மனோகரன் ஓங்கூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டு அய்யந்தோப்புக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டார்.  திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி சாலையில் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story