ஆடு திருடிய 6 பேர் கைது
ஆடு திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள திருமலைக்குடி கிராமத்தில் புழுதிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது 5 ஆடு மற்றும் 1 குட்டியுடன் வந்தவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 42) என்பவரின் ஆடுகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஆடு திருடியதாக திருமலைக்குடி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன், சிவா, உமேஷ், புதுக்கோட்டை மாவட்டம் செப்பலான் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், ராஜா, சேகர் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story