பென்னாகரத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தெருவில் தடுப்பு வேலி அமைப்பு
பென்னாகரத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா இருப்பதால் தெருவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பகுதியில் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் அந்த பகுதியில் வெளியாட்கள் வராமல் தடுக்க தடுப்பு வேலிகள் அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story