மருத்துவ துறையினர் கடவுளுக்கு சமம்
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் மருத்துவத் துறையினர் கடவுளுக்கு சமமானவர்கள் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பாராட்டினார்.
சிவகங்கை, மே.11-
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் மருத்துவத் துறையினர் கடவுளுக்கு சமமானவர்கள் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பாராட்டினார்.
ஆலோசனை கூட்டம்
சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கோரிக்கைகளை கலெக்டர் கேட்டறிந்தார். பி்ன்னர் அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று மக்களை மிகவும் பாதிப்படையச் செய்யும் வகையில் மிக அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட நெருக்கடியான கால கட்டத்தில் மருத்துவத்துறையின் சேவை மிக மகத்தான சேவையாக உள்ளது. இறைவனுக்கு இணையாக ஒப்பிடும் வகையில் உங்கள் பணி இருந்து வருகிறது என்றால் அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.
ஒவ்வொரு மருத்துவரும், செவிலியரும் காலம் நேரம் பார்க்காமல் தங்கள் பணிகளை கடமை உணர்வோடு செய்வதால் ஏராளமான பொதுமக்கள் கொடிய நோயில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட பணியில் உள்ள உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை உணர்ந்து அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உங்களுக்கு பணி மேற்கொள்ள ஏதுவாக தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் திட்டமிட்டப்படி வரப்பெறும்.
பணிச்சுமை
பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது சில இடர்பாடுகள் ஏற்படுவதால் உங்களுக்கான பணிச்சுமை ஏற்படுவதை நன்றாக உணரமுடிகிறது. அப்படிப்பட்ட காலக்கட்டங்களில் முடிந்த அளவு பணிச்சுமையை குறைக்கும் விதமாக அரசு தீவிரமாக திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தும். அதற்கு ஏற்ப மருத்துவர்களும், செவிலியர்களும் திட்டமிட்டு செயல்பட்டு மருத்துவப்பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.
மேலும் உங்கள் பணிசுமையை குறைக்க மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டார மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சுழற்சி முறையில் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
தொற்று
இப்படிப்பட்ட நிலையில் உங்கள் ஒவ்வொருவரின் கஷ்டத்திற்கு இடையே வேகமாக பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை சரிசெய்யும் வகையில் உங்களது பணியை திறம்பட மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ெரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர் மீனாள், சிறப்பு தலைமை மருத்துவர்கள் நாகசுப்பிரமணி, கங்காலெட்சுமி, முதல்நிலை செவிலி யர்கள் கலாவதி, ராஜேசுவரி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story