5 பேர் குண்டர் சட்டத்தில் கைது


5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 10 May 2021 11:12 PM IST (Updated: 10 May 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை கொலை வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்:
முத்துப்பேட்டை கொலை வழக்கில்  5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் கைது 
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெகன் (வயது 46), அருண் (24), அஜித் (23), செந்தில்ராஜா (45), யோகேந்திரன் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் சாந்தா 5 பேரை   குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து ஜெகன், அருண், அஜித், செந்தில்ராஜா, யோகேந்திரன் ஆகிய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story