கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 596 பேர் பலி


கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 596 பேர் பலி
x
தினத்தந்தி 10 May 2021 11:25 PM IST (Updated: 10 May 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

உயிரிழப்பில் புதிய உச்சமாக கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 596 பேர் பலியானார்கள். 39,305 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பாதித்தோர்

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 24 ஆயிரத்து 110 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 39 ஆயிரத்து 350 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 73 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 596 பேர் உயிரிழந்தனர். 

இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 32 ஆயிரத்து 188 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து 13 லட்சத்து 83 ஆயிரத்து 285 பேர் மீண்டுள்ளனர். 

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 71 ஆயிரத்து 6 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 16 ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ஹாசனில் 1,800 பேர்

அதேபோல் பாகல்கோட்டையில் 968 பேர், பல்லாரியில் 973 பேர், பெலகாவியில் 736 பேர், பெங்களூரு புறநகரில் 704 பேர், பீதரில் 305 பேர், சாம்ராஜ் நகரில் 623 பேர், சிக்பள்ளாப்பூரில் 599 பேர், சிக்கமகளூருவில் 362 பேர், சித்ரதுர்காவில் 172 பேர், தட்சிண கன்னடாவில் 1,175 பேர், தாவணகெரேயில் 197 பேர், தார்வாரில் 1,006 பேர், கதக்கில் 332 பேர், ஹாசனில் 1,800 பேர், ஹாவேரியில் 214 பேர், கலபுரகியில் 988 பேர், குடகில் 534 பேர், கோலாரில் 755 பேர், கொப்பலில் 412 பேர், மண்டியாவில் 1,133 பேர், மைசூருவில் 1,537 பேர், ராய்ச்சூரில் 582 பேர், ராமநகரில் 337 பேர், சிவமொக்காவில் 820 பேர், துமகூருவில் 2 ஆயிரத்து 168 பேர், உடுப்பியில் 855 பேர், உத்தரகன்னடாவில் 885 பேர், விஜயாப்புராவில் 659 பேர், யாதகிரியில் 727 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 374 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதேபோல் பல்லாரியில் 26 பேரும், பீதரில் 4 பேரும், சாம்ராஜ் நகரில் 7 பேரும், சிக்பள்ளாப்பூரில் 5 பேரும், சிக்கமகளூருவில் 5 பேரும், தட்சிண கன்னடாவில் 5 பேரும் இறந்துள்ளனர்.

தாவணகெரேயில் 3 பேரும், தார்வாரில் 8 பேரும், கதக்கில் 2 பேரும், ஹாசனில் 22 பேரும், ஹாவேரியில் 12 பேரும், கலபுரகியில் 3 பேரும், குடகில் 9 பேரும், கோலாரில் 8 பேரும், மண்டியாவில் 12 பேரும், மைசூருவில் 7 பேரும், ராய்ச்சூரில் 3 பேரும், ராமநகரில் 7 பேரும், சிவமொக்காவில் 11 பேரும், துமகூருவில் 15 பேரும், உடுப்பியில் 2 பேரும், உத்தரகன்னடாவில் 11 பேரும், விஜயாப்புராவில் 6 பேரும், யாதகிரியில் 3 பேரும் என இவர்கள் உள்பட மொத்தம் 596 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதிய உச்சம்
கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 596 பேர் இறந்துள்ளனர். 

அதே நேரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 50 ஆயிரத்தை தாண்டி கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக 50 ஆயிரத்தை நெருங்கியபடி பாதிப்பு ஏற்பட்டு வந்தது. 
இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இது மாநில அரசுக்கும், மக்களுக்கும் சற்று ஆறுதலை அளிப்பதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story