பெங்களூருவில் குப்பைகளை பொறுக்கி பிழைப்பு நடத்தியவர் கொடூர கொலை
பெங்களூருவில் குப்பைகளை பொறுக்கி பிழைப்பு நடத்தியவர் கொடூர கொலை
பெங்களூரு:
பெங்களூரு ராஜகோபால்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோவில் நேற்று காலையில் ஒரு வாலிபர் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அவரது பெயர் கிரீஷ் (வயது 27) என்று தெரிந்தது.
இவர், ராஜகோபால்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனது நண்பரான சோமு என்பவருடன் சேர்ந்து பழைய காகிதங்களை பொறுக்கி பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு ஆட்டோவில் படுத்து தூங்கும் விவகாரம் தொடர்பாக கிரீஷ், சோமு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த சோமு சாலையில் கிடந்த கூர்மையான ஆயுதத்தால் கிரீசை சரமாரியாக தாக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து ராஜகோபால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சோமுவை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story