பெங்களூருவில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்ற 2 போ் கைது


பெங்களூருவில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்ற 2 போ் கைது
x
தினத்தந்தி 10 May 2021 11:55 PM IST (Updated: 10 May 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்ற 2 போ் கைது

பெங்களூரு:


பெங்களூரு ஹெண்ணூர் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகப்படும் படியாக சுற்றிய 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனை நடத்திய போது, ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 2 பேரும் கைது செய்யப்பட்டார்கள். விசாரணையில், அவா்கள் சண்முகசாமி (வயது 31), மால்தேஷ் (31) என்பது தெரிய வந்தது.

இவர்கள் 2 பேரும், கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தற்போது தட்டுப்பாடு இருந்து வருவதால், அந்த மருந்தை தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து வாங்கி, அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைதான 2 பேரிடம் இருந்து 17 பாட்டில் ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.58 ஆயிரம் ஆகும். கைதான சண்முகசாமி, மால்தேஷ் மீது ஹெண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story