வருவாய் ஆய்வாளர் கொரொனா தொற்றுக்கு பலி
வருவாய் ஆய்வாளர் கொரொனா தொற்றுக்கு பலி
காட்பாடி
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 580-ஐ கடந்து உள்ளது. வேலூர் சத்துவாச்சாரி மவுண்ட் வியூ அப்பார்ட்மென்ட் பகுதியை சேர்ந்தவர் பாலசந்திரகுமார் (வயது 52). வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து காட்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தனர். நேற்று முந்தினம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனை தொடர்ந்து பாலச்சந்திர குமாரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். மாநகராட்சி அதிகாரி கொரோனாவால் பலியான சம்பவம் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story