காவேரிப்பாக்கத்தில் காய்கறி, மளிகை கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன


காவேரிப்பாக்கத்தில் காய்கறி, மளிகை கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன
x
தினத்தந்தி 10 May 2021 11:59 PM IST (Updated: 10 May 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கத்தில் காய்கறி, மளிகை கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன

காவேரிப்பாக்கம்

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தினந்தோறும் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை  அமல் படுத்திஉள்ளது. இந்த ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. 
இதில் அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை, பூ மற்றும் டாக்கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காவேரிப்பாக்கம் பகுதியில்  அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்பட்டன.

 பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களின் அருகில் உள்ள காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளுக்கு சென்று வழக்கம் போல பொருட்களை வாங்கினர். மேலும் காவேரிப்பாக்கம் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் பார்சல் மட்டும்  வழங்கப்பட்டது. 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

Next Story