விபத்தை ஏற்படுத்தும் குண்டும், குழியுமான சாலை


விபத்தை ஏற்படுத்தும் குண்டும், குழியுமான சாலை
x
தினத்தந்தி 11 May 2021 12:00 AM IST (Updated: 11 May 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

மூலிமங்கலத்தில் விபத்தை ஏற்படுத்தும் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

நொய்யல், மே.11-
மூலிமங்கலத்தில் விபத்தை ஏற்படுத்தும் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
குண்டும், குழியுமான சாலை
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மூலிமங்கலம் செல்லும் சாலையில் சிமெண்டு ஆலை, காகித ஆலை உள்ளது.
மூலிமங்கலம் சாலை வழியாக  தினசரி  சிமெண்டு ஆலை, காகித ஆலைகளுக்கு ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன.
அதேபோல் புன்னம்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இருந்து ஜல்லிகள் மற்றும் கருங்கற்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன. அதேபோல் கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன.
அடிக்கடி விபத்து
இந்த சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது, சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்குகின்றனர்.
அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் குழிகள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் குழிக்குள் விழுந்து தடுமாறி செல்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வருபவர்களும் இந்த குழிக்குள் விழுந்து காயம் ஏற்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story