வாணியம்பாடி அருகே 1,152 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்


வாணியம்பாடி அருகே 1,152 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 May 2021 12:00 AM IST (Updated: 11 May 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே 1,152 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் மேற்பார்வையில், போலீசார் ஆலங்காயம் அடுத்த பறவைகுட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனையிட்டத்தில் 1,152 வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து மினி லாரியுடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்கள் கடத்திவந்த பறவைகுட்டையை சேர்ந்த வெங்கடசேன் மகன் பிரபு (வயது 27) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story